146 அடி உயர முருகன் சிலை; முத்துமலை கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

3 months ago 11

சேலம்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கோவில்களுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோவிலில் உலகிலேயே மிக உயரமான, 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முத்துமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Read Entire Article