14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அரசு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 weeks ago 1

 

திருமயம். ஜன.25. திருமயத்தில் தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் திருமயம் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட அரசு வருவாய் கிராம ஊழியர்கள் திருமயம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது காலம் முறை ஊதியம் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திருமயம் வட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சிவா, பொருளாளர் பெரியசாமி, துணைத் தலைவர் ஆண்டியப்பன் மற்றும் கிராம நிர்வாக ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

The post 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அரசு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article