133 மோட்டார்கள் மூலம் 119 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

1 month ago 6

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. மண்டலம் 1 முதல் 15 வரையிலான 119 இடங்களில் 133 மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 8 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடிநீர் பகிர்மான நிலையங்கள், 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இந்நிலையங்களுக்கு தேவையான 102 ஜெனரேட்டர்கள் உரிய எரிப்பொருளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழுத்தம் குறைவான பகுதிகள், குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வரும் இடங்களில் 457 லாரிகள் மூலம் 4112 நடைகள் மாலை 6 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 300 நிவாரண மையங்கள் மற்றும் 90 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 8754 குடிநீர் தொட்டிகள் நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 711 தெரு நடைகளும் வழங்கப்பட்டுள்ளது. குடிநீரின் தரம் பரிசோதனை செய்வதற்காக 900 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.

The post 133 மோட்டார்கள் மூலம் 119 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article