12 பந்து யார்க்கர்: வேக புயல் அசத்தல்

1 day ago 5

டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் 9 ரன் எடுத்தால் வெற்றி என நிலை இருந்தது. கடைசி ஓவரை டெல்லி அணியின் வேக புயல் மிட்செல் ஸ்டார்க் வீசினார். இதில் 6 பந்துகளையுமே யார்க்கராக வீசினார். இதனால், ராஜஸ்தான் அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டி டை ஆனது. அடுத்த நடந்த சூப்பர் ஓவரிலும் மிட்செல் ஸ்டார்க் 6 யார்க்கர்களை வீசினார். இதனால் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த போட்டியை ஒரே ஆளாக மிட்செல் ஸ்டார்க் மாற்றிவிட்டார். 12 யார்க்கரை வீசி வெற்றியை பறித்துவிட்டார்’ என்று கூறினார். இந்த 12 பந்து யார்க்கர் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்ாதன்), பிரெட் லீ (ஆஸ்திரேலியா), லசித் மலிங்கா (இலங்கை), வாக்ர் யூனுஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் ஏற்கனவே உள்ளனர்.

The post 12 பந்து யார்க்கர்: வேக புயல் அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article