ராமநாதபுரம், பிப். 12: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களிலும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் சின்னக்கடை, அரண்மனை, தங்கப்பாநகர், சக்கரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 கடைகளில் தடையை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 12 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
The post 12 கிலோ கோழி இறைச்சி அழிப்பு appeared first on Dinakaran.