திருப்பூர், பிப். 25: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 15ம் தேதி தேர்வு முடிவடைகிறது. இந்த தேர்வுக்கு முன்னதாக 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில், உற்சாகமாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 348 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 30 ஆயிரத்து 235 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு appeared first on Dinakaran.