ராமநாதபுரம், மார்ச் 29: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8078 மாணவர்கள், 8334 மாணவிகள் என மொத்தம் 16,412 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 82 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களாக 458 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பிருந்திருந்தனர். இவர்களுக்கு 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு மற்றும் தேர்வு எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் 133 பேருக்கு, சொல்வதை கேட்டு எழுதுவதற்காக 133 ஆசிரியர்கள் (ஸ்கிரைப்) நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த தமிழ் பாடத்தில் 249 பேரும், தனி தேர்வர் 32 பேர் என மொத்தம் 381 பேர் ஆப்சென்ட் ஆனர். மொழி தாளில் 249 பேர் ஆப்சென்ட் ஆனது குறித்து அந்தந்த தலைமையாசிரியர்களிடம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் ஆய்வு செய்தார். மேலும் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க 860 அறை கண்காணிப்பாளர்களும், 115 பேர் கொண்ட பறக்கும்படை, நிற்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post 10ம் வகுப்பு தமிழ்தேர்வில் 381 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.