குளித்தலை, மே 17: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைமுருகன் மகன் ராகவன்( 8). இவர், தண்ணீர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சிறு வயது முதலே தினமும் யோகாசனம் செய்து வருகிறார். யோகா விழிப்புணர்வு செய்வதற்காகவும் உலக மக்கள் நலம் பெறவும், மழை பொழிந்து விவசாயம் செழித்திட வேண்டி இந்த இரண்டாம் வகுப்பு மாணவன் ராகவன் குளித்தலை அருகே உள்ள பிரசித்திபெற்ற அய்யர் மலையில் மலை உச்சியில் அமைந்துள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயில் 1017 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்து மலையேறினார்.
ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் தனி ஒரு யோகாசனம் செய்து மலையேறி உச்சியிலுள்ள சிவபெருமானை வழிபட்டார். ராகவன் படிக்கட்டுகளில் யோகாசனம் செய்து கொண்டு மலை உச்சிக்கு செல்லும் பொழுது பக்தர்கள் சிவ மந்திரங்களையும் ஓம் நமச்சிவாய எனக் கூறி மலை உச்சிக்கு சென்றனர்.
The post 1017 படிகளில் சுழற்சி முறையில் ‘யோகா’ அரசு பள்ளி மாணவன் சாதனை appeared first on Dinakaran.