
லாஸ் ஏஞ்சல்ஸ்,
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிர்வாகக் குழு, ஸ்டண்ட் டிசைனை போற்றும் வகையில், சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
100-வது ஆஸ்கர் விழா வரும் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விழாவில் இருந்து சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு 2027-ம் ஆண்டு வெளியான படங்கள் தேர்வாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.