சென்னை: 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் துறைகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் 4 மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உயர்கல்வி, ஐ.டி., பள்ளிக்கல்வி உட்பட 10 துறை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. புதிதாக உருவான 6 மாவட்டங்களில் விளையாட்டு வளாகம், கட்டுமான பணி குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்துக்குள் விரைவாக முடிக்க முதல்வர் அறிவுறுத்தினார்.
The post 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.