ஹோலி பண்டிகை: கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

3 hours ago 1

ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது:

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண்: 01005) வருகிற மார்ச் 10 மற்றும் 17 ம் தேதிகளில் அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.

அதே போல மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண்: 01006) மார்ச் 11 மற்றும் 18ம் தேதிகளில் அதிகாலை 2.15 மணியளவில் புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article