8 நாட்களில் "டிராகன்" படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா?

2 hours ago 1

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

'டிராகன்' படம் முதல் நாளில் உலக அளவில் சுமார் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் விடுமுறை நாட்களிலும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். எனவே இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது 8 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் டிராகன் திரைப்படம் உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Blockbuster Entertainment Continues for 2nd WeekBook your tickets for #ReturnOfTheDragon now ️ https://t.co/ajxTAPAWRB #BlockbusterArachakam @pradeeponelife in #ReturnOfTheDragonA @Dir_Ashwath Arachakam #PradeepAshwathCombo#KalpathiSAghoram #KalpathiSGaneshpic.twitter.com/lK8HF9pHwC

— AGS Entertainment (@Ags_production) March 1, 2025
Read Entire Article