ஹைதராபாத்தி ஸ்டைல் எண்ணெய் கத்தரிக்காய்

3 months ago 10

தேவையான பொருட்கள்

நாட்டு கத்தரிக்காய் – 1/2 கிலோ
வேர்க்கடலை – 100கிராம்
எள் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 கப்
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 1/4 கிலோ
வெங்காயம் – 3 பெரியது
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி கீரை – ஒரு பிடி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 1/4 லிட்டர்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

கத்தரிக்காயை சுத்தம் செய்து நான்காக கீறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை வதக்கி எடுத்து தனியே வைக்கவும். நீள வாக்கில் நறுக்கிய வெங்காயத்தை அதே எண்ணெயில் சிவக்க வதக்கி எடுக்கவும். வாணலியில் வேர்க்கடலை, எள், தேங்காய் & தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள், புளி கரைசல், பச்சை மிளகாய், கொத்தமல்லி கீரை மற்றும் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நீர் விட்டு அரைக்கவும். அரைத்து விழுதை கீறிய கத்தரிக்காயில் அடைத்து வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் & கறிவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போடவும். தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மூடி வைத்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடுவும். அனலை பாதியாக குறைத்து வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி கீரை தூவவும். சுவையான ஹைதராபாத்தி ஸ்டைல் எண்ணெய் கத்தரிக்காய் தயார்.

The post ஹைதராபாத்தி ஸ்டைல் எண்ணெய் கத்தரிக்காய் appeared first on Dinakaran.

Read Entire Article