ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

3 months ago 11

 

கரூர், நவ. 20: கருர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி அனைத்து போலீசார் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் போக்குவரத்து போலீசார், கடந்த இரண்டு நாட்களாக வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றர்.

அதனடிப்படையில், நேற்று முன்தினம் கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று கரூர் திருமாநிலையூர் அருகே பசுபதிபாளையம் போக்குவரத்து போலீசார், ஹெல்மட் இன்றி இரண்டு சக்கர வாகனங்களை ஒட்டி செல்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நிறுத்தி ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article