சென்னை: ‘சென்னையில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரியில் போட்டியிடலாம், சென்னையில் வசித்த நான் மயிலாடுதுறையில் போட்டியிடக் கூடாதா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கும்பகோணத்தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத சென்னையிலிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரியாமல் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தீர்கள்' என்று பேசியதன் மூலம், தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்கடிக்கப்படுவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தி, வயிற்றெரிச்சலை உணர முடிகிறது.