ஹெல்தி லைஃப் ஸ்டைல் சீக்ரெட்!

3 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி மாதத்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கடுமையான மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் கூட மிகப்பெரிய வித்தியாசங்களை கொண்டு வரலாம். உங்கள் வாழ்க்கை முறை விழிப்புணர்வாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் புரோமோட் மருத்துவமனையின் உள் மருத்துவ நிபுணரான டாக்டர். ஸ்பூர்த்தி.

சமச்சீரான சரிவிகித உணவுகள்

ஆரோக்கியமான உணவு முறை நல்ல ஆரோக்கியத்துக்கு அடித்தளம் ஆகும். உலக சுகாதார அமைப்பின் WHO கூற்றுப்படி அன்றாட உணவு முறை சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க உணவாக எடுத்துகொள்ளும் போது அது வாழ்நாள் நோய்களின் அபாயத்தை கூட கட்டுப்படுத்திவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட மோசமான நோய்களின் அபாயத்தை குறைக்க உணவு முறை உதவும். உணவை கட்டுப்பாட்டுடன் மிதமான உணவில் கவனம் செலுத்துங்கள்.

இந்த வகையான உணவு முறை எடை மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு போன்றவற்றை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள். பல வண்ணங்கள் அடங்கிய காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும்.

உடல் சுறுசுறுப்பு அவசியம்

நல்ல ஆரோக்கியமான உடல் செயல்பாடு முக்கியமானது. இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கு, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு வாரத்தில் 5 நாட்கள் என நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மிதமான உடல்பயிற்சி செய்ய வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைக்கிறது. தீவிரமான உடற்பயிற்சி தான் என்று இல்லாமல் சைக்கிள், நடைபயிற்சி, சைக்கிளிங், யோகா என எந்த பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது. மன நலனை மேம்படுத்துகிறது.

நீரேற்றம் அவசியம்

உடல் செயல்பாடு சிக்கலில்லாமல் சீராக இருக்க உடலுக்கு போதுமான நீரேற்றம் தேவை. நாள் ஒன்றுக்கு 8-10 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் போதுமான நீரேற்றம் உடல் செயல்திறன் சீராக இருக்கச் செய்யும். அறிவாற்றல் செயல்பாட்டை சீராக வைக்க உதவும். நீரேற்றமாக இருப்பது ஆற்றலை அதிகரிக்கும். செரிமான செயல்பாட்டை உறுதி செய்யும். தினசரி தண்ணீர் போதுமான அளவு குடிப்பதை உறுதி செய்யுங்கள்.

தூக்கம் அவசியம்

தூக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்குமே ஏற்றது. டாக்டர் ஸ்பூர்த்தி தினசரி 7-8 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்குவதற்காக செலவிட வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறார். நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் கூற்றுப்படி போதுமான தூக்கத்தை பெறுவது நினைவுத்திறனை மேம்படுத்த செய்கிறது. இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலப்படுத்துவதோடு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்கிறது. தூக்கத்தின் தரம் மேம்பட, ஆழ்ந்த தூக்கம் பெற தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் கண்விழிப்பது ஒரு சுழற்சியை சீராக கொண்டுவரும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு மொபைல் போஃன் பயன்பாட்டை தடுக்க
வேண்டும்.

மன அழுத்தம் கையாள்வது

மன அழுத்தம் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தியானம், யோகா, ஜர்னலிங் செய்வது மன அழுத்த மேலாண்மையை திறம்பட நிர்வகிக்கிறது. அமெரிக்க உளவியல் சங்கத்தின் படி நாள்பட்ட மன அழுத்தம் இதய நோய், கோளாறுகள், பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றை உண்டு செய்யும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க யோகாசனம் செய்யலாம். பிடித்தமான வேலைகளை செய்து பழகலாம். ஓய்வுக்கான நேரத்தை ஒதுக்கி பிடித்த ஒன்றை செய்வதற்கான உணர்சி நல்வாழ்வை பங்களிக்க இவை செய்கிறது.

அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை

நோய் வந்த பிறகு சிகிச்சை என்பதை விட வரும் முன் காப்போம் என்பதே சிறந்தது. குடும்ப மருத்துவ வரலாறு வயது போன்றவற்றை கணக்கில் கொண்டு உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி உரியபரிசோதனையை செய்துவிட வேண்டும். இதனால் முன்கூட்டியே சிக்கல்களை கண்டறிந்து சிகிச்சை பெற முடியும் என்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் டாக்டர். ஸ்பூர்த்தி. இதனால் இதய ஆரோக்கியம் கண்காணிக்கவும், பெரிய பிரச்னைகள் தடுக்கவும், வழக்கமான பரிசோதனைகள் செய்வது
அவசியம் என்று அமெரிக்க இதய சங்கம் வலியுறுத்துவதையும் குறிப்பிடுகிறார். ஆரம்ப கால நோயறிதல் மற்றும் தடுப்பு பராமரிப்பு எதிர்காலத்தில் உடல்நல பிரச்னைகளை பெருமளவு தடுக்கலாம்.

இறுதியாக

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிலையான மாற்றங்கள் சிறிய அளவில் செய்தாலே வாழ்க்கை முழுமையும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். தினசரி உணவு முறையில் சமச்சீரான உணவுகள், உடற் பயிற்சி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பது, நீரேற்றம், மன அழுத்தத்தை நிர்வகிப்பது இவையெல்லாம் இணைந்து உடல் பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இவற்றையெல்லாம் செய்து வந்தால் இந்த பிப்ரவரி மட்டும் அல்ல வருடத்தின் எல்லா நாட்களிலும் எல்லா மாதங்களிலும் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுத்து சிறிய படிகளை எடுத்துவையுங்கள் என்று டாக்டர். ஸ்பூர்த்தி அனைவரையும் ஊக்குவிக்கிறார். இவரது எளிமையான ஆனால் பயனளிக்கும் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் புகழ் பெற்ற சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதலை ஆதரிப்பதன் மூலமும் நீண்ட நாட்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

தொகுப்பு: தவநிதி

The post ஹெல்தி லைஃப் ஸ்டைல் சீக்ரெட்! appeared first on Dinakaran.

Read Entire Article