ஹெட் களமிறங்கிய உடன் ரோகித் இதை செய்திருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங் கருத்து

4 months ago 18

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது.

கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் . இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 45 ரன்னுடனும், ஸ்டார்க் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினர். டிராவிஸ் ஹெட் 152 ரன், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன் எடுத்தனர். இந்நிலையில், டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களம் இறங்கிய உடன் ரோகித் சர்மா, பும்ராவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஹெட் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுதே இந்தியா சிறப்பாக செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி அவரை அதிகம் தாக்கவில்லை. அவர் பேட்டிங் செய்ய உள்ளே நுழைந்ததும் ரோகித் சர்மா, பும்ராவை உடனடியாக கொண்டு வந்து இருக்க வேண்டும்.

ஆனால் அவர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஜடேஜாவை எதிர்கொண்டார். பும்ரா, ஹெட்டுக்கு எதிராக ஆரம்பத்திலேயே சில ஓவர்கள் பந்துவீசி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article