
வல்லநாடு,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில், திருவிழாவில் கலந்து கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த குடிநீரால் ஏற்பட்ட பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.