ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்!!

3 weeks ago 5

ஓசூர் :ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் 2021க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,39,725 இளைஞர்களுக்கும், மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. 2021ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில் சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு எடுத்து, அதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது , ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் முடிவு எடுத்துள்ளது. ஓசூரில் ரூ.4,322 கோடி முதலீட்டில் டிவிஎஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.தொழிற்சாலையில் ஆண்டுக்கு 30 லட்சம் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3.60 மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தியாகின்றன. இந்த நிலையில், ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீமையமாக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. 3.28 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள கட்டுமான பகுதியை 5.22 லட்சம் சதுர அடி பரப்பளவாக விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது. பார்க்கிங், ஆய்வக வசதி, அலுவலக கட்டடம், வாகனங்களுக்கு வண்ணம் அடிக்கும் இடம், உற்பத்தி கட்டடம் ஆகியவைகளும் அமைய உள்ளன. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த உடன் நவீனமயமாக்கும் பணியானது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்!! appeared first on Dinakaran.

Read Entire Article