டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
*அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
*உ.பி. கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
*அதிவேகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
*25 கோடி பேரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளோம்
*நாட்டின் வளர்ச்சி அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது
*2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
*நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
*100-வது ராக்கெட் விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
*ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்பதே இலக்கு.
The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. அதிவேகத்தில் திட்டங்கள் நிறைவேற்றம்; வறுமைக்கோட்டில் இருந்து 25 கோடி பேர் மீட்பு: குடியரசுத் தலைவர் உரை appeared first on Dinakaran.