ஹிண்டன்பர்க் மூடப்படுவதால் குற்றச்சாட்டுகள் பொய்யாகி விடாது: காங். கருத்து

2 weeks ago 4

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதால் மோடி, அதானி மீதான எந்த குற்றச்சாட்டும் பொய்யாகி விடாது. அதானியின் மெகா மோசடி குறித்து காங்கிரஸ் 100 கேள்விகளை பிரதமர் மோடியிடம் கேட்டது. அதில் 21 கேள்விகள் மட்டுமே ஹிண்டர்பர்க் அறிக்கையில் இருந்தன. இந்த விஷயம் மிகவும் ஆழமானது. தேசிய நலனை அடகுவைத்து, பிரதமரின் நெருங்கிய நண்பர்களை வளப்படுத்த வெளியுறவுக் கொள்கையை துஷ்பிரயோகம் செய்வதும் இதில் அடங்கும்.

அதானி நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் பல ஆதாரங்கள் வெளிவந்ததால்தான் பல நாடுகள் அதானி திட்டங்களை ரத்து செய்துள்ளன. இவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே முழுமையாக விசாரிக்க முடியும். மற்றபடி, ஏற்கனவே சமரசம் செய்யப்பட்ட அரசின் நிறுவனங்கள் சக்திவாய்ந்தவர்களையும் பிரதமரின் நண்பர்களையும் பாதுகாக்க மட்டுமே தொடர்ந்து செயல்படும். இவ்வாறு கூறி உள்ளார்.

The post ஹிண்டன்பர்க் மூடப்படுவதால் குற்றச்சாட்டுகள் பொய்யாகி விடாது: காங். கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article