
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. நானியின் முந்தைய படங்களான ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசரா, ஹாய் நான்னா படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் மிக்கி ஜே மேஜர் இசையில் தமிழில் கார்த்தி குரலில் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகியுள்ளது.