ஹாலோவீன் தினம் : பயங்கர பேய் உருவங்கள், ரத்தம் சொட்டும் ஜாம்பி வேடங்களில் மக்கள் நகர்வலம்

3 weeks ago 4

வாஷிங்டன் : அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டபயங்கர பேய் உருவங்கள், ரத்தம் சொட்டும் ஜாம்பி வேடங்களில் உலா பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஹாலோவீன் தினத்தையொட்டி, பேய்கள், ஜாம்பிகள் வேடம் அணிந்து மக்கள் நகர்வலம் சென்று கொண்டாடி வருகின்றனர். இறந்தவர்களின் ஆன்மாக்கள் வருகை தரும் நாளாக கருதப்படும் ஹாலோவீன் தினம் ஆண்டுதோறும் அக் 31ம் தேதி அமெரிக்கா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆன்மாக்களை தடுக்க கொடூர உருவம் கொண்ட பேய்கள், பிசாசுகள், எலும்புக் கூடுகள், ரத்தம் வழிய நடனமாடும் ஜாம்பிகள் என பயங்கர வேடங்களை அணிந்து மக்கள் தெருக்களில் உலா வருவார்கள். அவ்வகையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ஜாம்பிகள் வேடம் அணிந்து மக்கள் நகர் உலா வந்தனர்.

ரத்தம் பூசிய, வாய் பிளந்த கோர முகத்துடனும் ஓநாய் மனித உருவிலும் தலையில்லா முண்டமாகவும் ஜாம்பிகள் பேரணியாக சென்றது. பேய் நகரம் போல காட்சி அளித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ள ட்ரம்ப் வேடமணிந்த ஜாம்பியும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. ஹங்கேரியில் ஹாலோவீணை வரவேற்கும் வகையில் பேய் உடைகள், அச்சமூட்டும் உருவகங்களின் முகமூடிகள், டாட்டூக்கள் அணிந்தவர்கள், நதியில் துடுப்பு படகுகளை இயக்கி மகிழ்ந்தனர். ஹாலோவீன் என்றதும் நம் நினைவுக்கு வரும் பூசணிக்காயில் படகு செய்து பெல்ஜியம் மக்கள் ஓட்டியுள்ளனர்.

The post ஹாலோவீன் தினம் : பயங்கர பேய் உருவங்கள், ரத்தம் சொட்டும் ஜாம்பி வேடங்களில் மக்கள் நகர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article