
சென்னை,
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'கேங்ஸ்டர்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இப்படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான 'எமர்ஜென்சி' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கங்கனா ரனாவத் ஹாலிவுட்டில் கால்பதிக்க உள்ளார். ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டாலோன் மற்றும் 'டீன் வுல்ப்' புகழ் டைலர் போஸி ஆகியோருடன் இணைந்து 'பிளஸ்டு பி தி ஈவில்' என்ற ஹாலிவுட் ஹாரர் படத்தில் கங்கனா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நியூயார்க்கில் விரைவில் தொடங்க உள்ளது.