பாகிஸ்தான் வான்பகுதி மூடல்; விமானங்கள் பறக்கத்தடை

4 hours ago 2

லாகூர்,

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல் முழு அளவிலான போருக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா இன்று தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.10 முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Read Entire Article