ஹாலிவுட் இயக்குனருடன் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

6 days ago 5

உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது திரைத்துறையில் ஆர்வம் காட்டியுள்ளார். சினிமாவில் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிறுவனத்தை ஹாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மேத்யூ வாகனுடன் இணைந்து உருவாக்கியுள்ளதாக கூறும் அவர் நிறுவனத்துக்கு 'யுஆர். மார்வ்' என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் ரொனால்டோ குறிப்பிட்டிருப்பதாவது, "ஒரு மகிழ்ச்சியான புது அத்தியாயம் இது. பிஸுனஸில் எனது புதிய முயற்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பு வீடியோவையும் ரொனால்டோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மேத்யூ வாகனின் படம் தொடர்பான காட்சிகளும் ரொனால்டோ விளையாடும் கால்பந்து தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வரும் என குறிப்பிட்டிருப்பதால் அதை நோக்கி அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

... and action! I'm excited to announce UR•MARV, my new film studio with Matthew Vaughn, and can't wait to tell you about our first movie. Coming soon! pic.twitter.com/gr8Lffhom3

— Cristiano Ronaldo (@Cristiano) April 11, 2025
Read Entire Article