"ஹார்ட்டின்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

1 week ago 6

சென்னை,

'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அந்த படத்தில் அவரது செலின் கதாபாத்திரம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. காதலும் கடந்து போகும், கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக அவர் நடித்தது அவரை இன்னும் பிரபலமாகியது. இவர் நடித்த 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் 'ஹார்ட்டின்'. தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் பீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார். சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'ஹார்ட்டின்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு 'ஹார்ட்டின்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் 'ஹார்ட்டின்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Read Entire Article