
பெங்களூரு,
பெங்களூருவில் மத்திய மந்திரி ஷோபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகிறார்கள். நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டனர். இதனால் அந்தநாட்டின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். ஆனால் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரசார் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள்.
எனவே அக்கட்சி மேலிடம் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை கூற வேண்டும். நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு உள்ளேயும், வெளியேயும் பயங்கரவாத முகாம்களை தாக்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் ஆதாரம் கேட்கிறது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி கேள்வி கேட்கும் அந்த காங்கிரஸ் தலைவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.