ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

3 weeks ago 5
ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். செங்கடல் பகுதியில் சர்வதேச கடல் போக்குவரத்துக்கு ஹவுதிக்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் தெரிவித்தார். தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை நெதன்யாகுவும், ராணுவ அதிகாரிகளும் பார்வையிட்டனர். அப்போது பேசிய நெதன்யாகு, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இணைந்து ஹவுதிகளுக்கு எதிராக உறுதியுடனும், நுட்பத்துடனும் செயல்படுவோம் எனத் தெரிவித்தார். ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, செங்கடல் பகுதியில் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதிக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Read Entire Article