
சென்னை,
'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பிளடி பெக்கர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனை தொடர்ந்து, தற்போது, கவின் பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் கவின் நடிக்க உள்ளார். அந்த படத்தினை தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்க உள்ளார். இந்த நிலையில், இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளன.