புதுடெல்லி: 2025ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை செல்லும் யாத்ரீகர்களின் புறப்பாடு ஏப்ரல் 29 – மே 30 ஆகிய தேதிகளுக்கிடையே திட்டமிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் இந்தியாவில் இருந்து ஹஜ் செல்ல 1,75,025 பேருக்கு ஒதுக்கீடு செய்து சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நடப்பாண்டில் கூடுதலாக மேலும் 10,000 பேருக்கு அனுமதி வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது.
இந்நிலையில் ஹஜ் யாத்திரை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ 5 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். சவுதி அரேபிய அமைச்சர் தவ்பிக் பின் பஸ்வான் அல் ரபியாவை நாளை சந்திக்க உள்ள கிரண் ரிஜிஜூ, 2025ம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
The post ஹஜ் புனித யாத்திரை மேலும் 10,000 பேருக்கு அனுமதி கிடைக்குமா? சவுதியுடன் நாளை ஒப்பந்தம் appeared first on Dinakaran.