கடலூரில் தொடர் கனமழை: குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்

2 hours ago 1

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி, அண்ணாமலைநகர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Read Entire Article