ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் கதாநாயகன் இவரா?

6 months ago 22

சென்னை,

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இதனையடுத்து, ஸ்ரீலீலா ராபின்ஹுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த மாதமே வெளியாக இருந்த இப்படம் சில கார்ணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

இதனை சமீபத்தில் ஸ்ரீலீலாவும் உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அப்படத்தில் ஸ்ரீலீலாவுக்கு ஜோடியாக எந்த கதாநாயகன் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ளதாகவும், கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article