ஸ்ரீநகர் சென்றடைந்தார் அமித்ஷா

4 hours ago 2

ஜம்மு,

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 அப்பாவிகள் பலியாகினர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து உயர்மட்டக் கூட்டத்தை நடத்துவதற்காக ஸ்ரீநகர் சென்றடைந்தார் உள்துறை மந்திரி அமித் ஷா. அவரை அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர். தாக்குதல் சம்பவம் பற்றி சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் அமித்ஷாவிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இறந்தவரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது, குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும். சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்தேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினேன். அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் ஸ்ரீநகருக்குச்செல்வேன்" என்று அதில் கூறி இருந்தார்.

Read Entire Article