ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி மாணவர்கள்: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி

3 months ago 10

பெரம்பலூர், பிப். 11: 16 வயதினருக்கான அணிப்பிரிவில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தனர். பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் CSK மற்றும் PDCA இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 16-வயதிற்குற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கலந்தகொண்டு நாக்அவுட் சுற்றில் 20 ஓவரில் 5-விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்து வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து 08.02.2025 அன்று நடைபெற்ற அரை இறுதி சுற்றில் 20 ஓவரில் 3-விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றனர். அதன் பின் 09.02.2025 அன்று நடைபெற்ற இறுதி போட்டியில் எதிர் அணியினர் 20 ஓவரில் 6-விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் பெற்றிருந்தனர்.

பிறகு கலமிறங்கிய  ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14.1 ஓவரிலேயே 92 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி வெற்றி கோப்பையை கைபற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களை  ராமகிருஷ்ணா கல்ல நிறுவனத்தின் தலைவர் சேவைச்செம்மல் திரு டாக்டர் சிவசுப்ரமணியம் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் செயலாளர் திரு விவேகானந்தன். முதல்வர் கலைச்செல்வி, கிரிக்கெட் கோச் கெளதம், துறைத்தலைவர்கள் திரு.செல்வம், திரு மருததுரை, திரு.நல்லேந்திரன், திரு.முத்துக்குமார். திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.கனகராசு, திரு.செல்வக்குமார், பாலகிருஷ்ணன் திருமதி. மகாலட்சுமி ஆசிரியர் திரு ராஜசேகரன் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி வாணி பிரியா செல்வ ராணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

The post ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி மாணவர்கள்: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article