ஸ்மிருதி மந்தனா சாதனை வேட்டை

4 weeks ago 7

நவி மும்பை: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். 3வது போட்டியில் 77 ரன் குவித்த மந்தனா, டி20 போட்டிகளில் 50 பிளஸ் ரன்களாக 30வது முறை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அவர், நியூசிலாந்து அணியை சேர்ந்த சுஸீ பேட்சின் 29 முறை 50 பிளஸ் சாதனையை தகர்த்துள்ளார். சுஸீ பேட்சின் அதிகபட்ச பவுண்டரி சாதனையையும் மந்தனா 506 பவுண்டரிகளுடன் முறியடித்துள்ளார். ஒரு தொடரில் அதிக ரன் குவித்த சாதனையை, இந்தியாவின் மித்தாலி ராஜ் 192 ரன்களுடன் நிகழ்த்தி இருந்தார். அந்த சாதனையையும், 193 ரன் குவித்து அவர் முறியடித்துள்ளார்.

The post ஸ்மிருதி மந்தனா சாதனை வேட்டை appeared first on Dinakaran.

Read Entire Article