ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதாந்திர மின் கணக்கீடு முறை விரைவில் நடைமுறைக்கு வரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

2 weeks ago 2

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்ததும் மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு முறை அமலுக்கு வரும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுடம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவது பற்றிய ஆய்வுக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதாந்திர மின் கணக்கீடு முறை விரைவில் நடைமுறைக்கு வரும். ஸ்மார்ட் மீட்டர்களுக்கு புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது; விரைவில் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். ஃபெஞ்சல் புயலால் 12,265 மின் கம்பங்கள் சேதமடைந்தது; அவை குறுகிய காலத்திலேயே சீரமைக்கப்பட்டது. 6534 புதிய மின்மாற்றிகளை அமைக்க திட்டமிட்டு, 5407 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய மின் இணைப்புகளை காலதாமதமின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடைகாலத்தில் 22,000 மெகாவாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 14,500 மெகாவாட் அளவு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு விரைவில் டெண்டர் கோரப்படும் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

The post ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதாந்திர மின் கணக்கீடு முறை விரைவில் நடைமுறைக்கு வரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article