சென்னை: பாரதியாரின் ஆன்மிக பரிமாணத்தை காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘சக்திதாசன் - கடவுளை கண்ட கவிஞன்’ என்ற ஆவணப்படம், யூ-டியூபில் இன்று மாலை வெளியாகிறது.
மகாகவி பாரதியார் பற்றி பலரும் அறியாத, அவரது ஆன்மிக பரிமாணத்தை காட்டும் வகையில் ‘சக்திதாசன் - கடவுளை கண்டகவிஞன்’ என்ற ஆவணப்படத்தை சவுந்தர்யா சுகுமார் தயாரித்துள்ளார். உஷா ராஜேஸ்வரி இயக்கி உள்ளார். பாரதியாரின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன் பாரதி கதை எழுதியுள்ளார். ராஜ்குமார் பாரதி இசையமைத்து, எம்.வி.ஆனந்த் தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதியாராக கார்த்திக் கோபிநாத் நடித்துள்ளார். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது.