தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.46.91 கோடி அதிகமாகும்.
பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் என்பதால், டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் மூடப்படும். இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் விழாவுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினர்.