ஸ்பெயினில் திடீர் வெள்ளம் - 51 பேர் பலி

6 months ago 23

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அதேவேளை, கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

Read Entire Article