''ஸ்பிரிட்'' நடிகையின் 'தடக் 2' டிரெய்லர் வெளியீடு...படம் திரைக்கு வருவது எப்போது?

3 hours ago 1

சென்னை,

கரண் ஜோகர் தயாரிப்பில் ஷாஜியா இக்பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தடக் 2. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் ரீமேக் ஆகும். இதன் முதல் பாகம் 'சாய்ராத்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவிருந்தது, ஆனால் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் சமீபத்தில் பிரபாஸின் ''ஸ்பிரிட்'' படத்தில் இணைந்த திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

Read Entire Article