நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் - அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி

3 hours ago 2

பிரேசிலியா,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிரேசிலுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் வரி விதித்து அதிரடி காட்டி உள்ளார். இது வர்த்தக போரை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதற்கு நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரேசில் பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் லூயிஸ் இன்சியோலுலா டா சில்வா கூறுகையில், முதலில் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்வோம். பேச்சுவார்த்தை இல்லை என்றால் பரஸ்பர சட்டம் நடைமுறைக்கு வரும். அவர்கள் எங்களிடம் 50 சதவீதம் வசூலிக்க போகிறார்கள் என்றால் நாங்கள் அமெரிக்காவிடம் 50 சதவீதம் வரி வசூலிப்போம் என்றார்.

Read Entire Article