'ஸ்பிரிட்': தீபிகா படுகோனே விலகல்...பிரபாஸுக்கு ஜோடியாகும் 'மதராஸி' பட நடிகை?

8 hours ago 2

சென்னை,

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து தீபிகா படுகோனே விலகியநிலையில், அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

கல்கி 2898 ஏடி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, 'ஸ்பிரிட்', 'சலார் 2', 'தி ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் .'ஸ்பிரிட்' பிரபாசின் 25வது படமாகும். இதனை, 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தநிலையில், சம்பளம் காரணமாக 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோனே விலகி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தீபிகா படுகோனேக்கு பதிலாக வேறொரு நடிகையை தேர்வு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தமிழில், 'மதராஸி', 'ஏஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ள ருக்மணி வசந்திடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதால் அதற்காக படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.

Read Entire Article