
சென்னை,
கோடை காலம் முடிவடையும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதால் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக குறிப்பிட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:-
கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில்க்கு செல்லும் (வண்டி எண்: 12689/12690 ) தினசரி இயக்கப்படும் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் மே 25 -ல் இருந்து நிரந்திரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இணைக்கப்பட்ட பெட்டிகளின் விவரம்:
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி - 2 பெட்டிகள் , மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி - 5 பெட்டிகள், ஸ்லீப்பர் வகுப்பு - 11 பெட்டிகள் , இரண்டாம் வகுப்பு இருக்கை , முன்பதிவில்லா பெட்டி தலா 2 பெட்டிகளுடன் மொத்தமாக 24 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும்:
தாம்பரம் - செங்கோட்டை, செங்கோட்டை - தாம்பரம் வண்டி எண்: 20681/20682 என இரு மார்க்கமாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து மே 23 முதல் ஜூன் 18, வரையும் செங்கோட்டை இருந்து மே 24 முதல் ஜூன் 19ம் தேதி, வரையும் தற்காலிகமாக கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் 22657/22658 இரு மார்க்கமாக செல்லும் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
தாம்பரம் இருந்து மே 25 முதல் ஜூன் 16ம் தேதி வரையும், நாகர்கோவில் இருந்து மே 26 முதல் ஜூன் 17ம் தேதி வரையும், தற்காலிகமாக கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி சேர்க்கப்படும்.
இணைக்கப்பட்ட பெட்டிகளின் விவரம்:
1- ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டு வகுப்பு பெட்டிகள், 2- ஏசி இரண்டு வகுப்பு பெட்டிகள், 4- ஏசி மூன்று வகுப்பு பெட்டிகள், 11- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள்: மொத்தம் 24 பெட்டிகள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.