
சென்னை,
நடிகர் பிரபாஸ் தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் 'ஸ்பிரிட்', 'சலார் 2', 'கல்கி 2' மற்றும் பிரசாந்த் வர்மாவுடன் ஒரு படமும் அவரது கைவசம் உள்ளது.
இதில் ஸ்பிரிட் படம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும் . இப்படத்தை 'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதனை தயாரிப்பாளர் பூஷன் குமார் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ஸ்பிரிட் படப்பிடிப்பு இன்னும் 2 முதல் 3 மாதங்களில் துவங்கும் என்றும் ஸ்பிரிட் வெளியான பிறகு அனிமல் 2 துவங்கும் என்றும் தெரிவித்தார்.