ஸ்பான்ச் டீ கேக்

2 hours ago 1

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்
பேக்கிங் சோடா -1 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
பால் – 1 சிறிய கப்
எண்ணெய்- 2 ஸ்பூன்
வெண்ணெய்- 100 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இருமுறை சலிக்கவும். வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும் அகலமான கிண்ணத்தில் வெண்ணெயுடன் எண்ணெய் வெண்ணிலா எசன்ஸ், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து மரக்கரண்டியால் நன்கு கலக்கவும். அதில் சலித்த மைதா கலவையை சேர்த்து நன்கு கலந்து வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி அவனில் வைக்கவும். 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 45 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். அவன் இல்லை என்பவர்கள் குக்கரில் உப்பு பரப்பியும் வைத்து எடுக்கலாம். ஆனால் 45 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

The post ஸ்பான்ச் டீ கேக் appeared first on Dinakaran.

Read Entire Article