மாதவரம், மார்ச் 6: சென்னை அண்ணாநகர் 3வது அவென்யூ சர்வீஸ் பிரதான சாலையில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக அண்ணாநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மசாஜ் சென்டருக்கு அருகே சென்று அண்ணாநகர் போலீசார் மாறுவேடத்தில் மறைமுகமாக நின்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது மசாஜ் சென்டருக்கு நிறைய ஆண்கள் வந்து செல்வதை நோட்டமிட்ட போலீசார், திடீரென மசாஜ் சென்டரின் உள்ளே சென்று அதிரடி சோதனை செய்தபோது அங்கு தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. விசாரணையில், மேனேஜர்களாக பணிபுரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்து (27), சுஜின் (34), இவர்களது உதவியாளர் அகில் (23) ஆகிய மூன்று பேர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதில் 4 செல்போன்கள், ₹6000 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பெண்களை மீட்டு சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் appeared first on Dinakaran.