சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே ரயில்வே பொறியியல் பணி நடக்க உள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் 6, 7-ம் தேதிகளில் (இன்று, நாளை) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு நண்பகல் 12.28 மணி, 12.40 மணி, 1.45 மணி மின்சார ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல, கடற்கரை - அரக்கோணம் மதியம் 1.00 மணி ரயில், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.