தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தென்மாநில எம்.பி.க்கள் கூட்டு குழு அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

5 hours ago 2

சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மாநில உரிமையை காப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் நா.முருகானந்தம் கலந்து கொண்டனர்.

Read Entire Article