'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்' வெப் தொடர் வெளியாகும் தேதி அறிவிப்பு

3 months ago 24

சென்னை,

ஏ ஸ்டோன் பெஞ்ச் புரொடக்சன் சார்பில் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள தொடர் 'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்'. அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளனர்.

இதில் நவீன் சாந்ரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், 'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்' தொடர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரபல ஓ.டி.டி தளமான பிரைம் வீடியோவில் வரும் 18-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனை பிரைம் வீடியோ தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Roll the dice and accept your fate #SnakesandLaddersOnPrime, New Series, Oct 18 pic.twitter.com/dFi8ZVCbt7

— prime video IN (@PrimeVideoIN) October 7, 2024
Read Entire Article